ரஷ்யா புதிய வகை ஏவுகணை ஒன்றை தனது படைகளுக்கு வழங்கவுள்ளது. ஒலியின் வேகத்திலும் 27 மடங்கு வேகத்தில் அணுகுண்டுகளை எடுத்து சென்று எதிரியை தாக்கக்கூடிய இந்த ஏவுகணையால் அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கம் மிரட்டப்பட்டுள்ளது.
.
ஒருகாலத்தில் ஏவுகணைகளை கொண்ட நாடுகள் பலம் வாய்ந்த நாடுகளாக இருந்தன. குறிப்பாக அமெரிக்காவும், ரஷ்யாவும் பெருமளவு ஏவுகணைகளை கொண்டு மறு தரைப்பை கட்டுப்பாடில் வந்திருந்தன. நீ தாக்கினால் நானும் தாங்குவேன் என்ற நிலை இருந்தது.
.
தனது கையை ஓங்கவைக்க அமெரிக்கா ஏவுகணை மறிப்பு ஏவுகணைகள் தயாரித்து எதிரியை தாக்க மட்டுமன்றி, தம்மை நோக்கி ஏவப்பட்ட எதிரியின் ஏவுகணைகளை தடுக்கவும் நுட்பங்களை (missile defense system) நடைமுறை செய்திருந்தது. அண்மைவரை அதுவே சூழ்நிலை.
.
தற்போது ரஷ்யா அதிவேக ஏவுகணைகள் அறிமுகம் செய்கிறது. Avangard என்ற இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தின் 27 மடங்கு வேகத்தில் சென்று எதிரியின் நிலைகளை தாக்கும் வல்லமை கொண்டதாம். அது உண்மை ஆகின், அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு தொழிநுட்பம் Avangard ஏவுகணைகள் இடைமறித்து அழிக்க முடியாது போகும். அதனால் ரஷ்யா அமெரிக்காவின் எந்த குறியையும் தாக்கும் வல்லமையுடன் சிலகாலத்துக்கு இருக்கும்.
.
கடந்த புதன் கிழமை செய்யப்பட்ட இறுதி சோதனையின் போது Avangard ஏவுகணை சுமார் 6,000 km தூரத்தில் இருந்த சோதனை குறியை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாம்.
.
1972 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்த Anti-Ballistic Missile Treaty உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா 2002 ஆம் ஆண்டில் வெளியேறி இருந்தது. புதிய ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிப்பதே அமெரிக்காவின் வெளியேற்றத்துக்கு காரணமாக இருந்தது. வேறு வழியின்றி 2004 ஆம் ஆண்டில் ரஷ்யா அதிவேக ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.
.