சுமார் 4,400 வருட பழைய கல்லறை (tomb) ஒன்று எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு உள்ள மற்றைய புராதன கல்லறைகளுடன் ஒப்பிடுகையில் இந்த கல்லறை மிக குறைந்த பாதிப்புக்களையே கொண்டுள்ளது. திருடர்கள், மற்றும் எதிரிகளின் கண்களில் இந்த கல்லறை அகப்படாது இருந்தமையை காரணமாகலாம்.
.
அக்காலத்தில் இப்பகுதி King Neferirkare ஆட்சியில் இருந்தது என்று கூறப்படுகிறது. இவரின் ஆட்சி கி.மு. 2500 முதல் 2300 வரையில் இருந்துள்ளது.
.
கைரோவுக்கு (Cairo) அண்மையில் உள்ள Saqqara கல்லறை தொகுதிகளில் ஒன்றாகவே இது உள்ளது. இந்த கல்லறை உள்ளே உள்ள உருவ சிலைகள், ஓவியங்கள், அவற்றின் கலர் பூச்சுகள் எல்லாம் மிகவும் தரமான நிலையிலேயே இன்றும் உள்ளன.
.
இங்கே ஆட்சியாளரின் முக்கிய மத பிரமுகர் Wahtye, அவரின் தாயார் Merit Meen, மனைவி Weret-Ptah, உறவினர்கள் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இந்த கல்லறை சுமார் 10 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரம் கொண்டது.
.
இந்த கல்லறை அகழ்வு பணிகள் நாளை 16 ஆம் திகதி முதல் மீண்டும் தொடரப்படும்.
.