2017 ஆம் ஆண்டில் அதிக பயணிகளின் (visitors) வருகையை கொண்ட இடமாக Hong Kong இருந்துள்ளது. இந்த கணிப்பை பிரித்தானிய அமைப்பான Euromonitor வெளியிடுள்ளது. இரண்டாம் இடத்தில் Bangkok நகரமும், மூன்றாம் இடத்தில் London நகரமும் உள்ளன.
.
கடந்த வருடம் Hong Kong நகருக்கு 27.9 மில்லியன் பயணிகள் சென்றுள்ளார். Bangkok நகருக்கு 22.5 மில்லியன் பயணிகளும், London நகருக்கு 19.8 மில்லியன் பயணிகளும் சென்றுள்ளனர்.
.
அதி கூடிய பயணிகளை கொண்டுள்ள முதல் 10 நகரங்களுள், 6 நகரங்கள் ஆசியாவிலும், 2 நகரங்கள் ஐரோப்பாவிலும், 1 நகரம் அமெரிக்காவிலும், 1 நகரம் மத்திய கிழக்கிலும் உள்ளன.
.
மற்றைய 7 நாடுகளின் பயணிகள் வருகை வருமாறு:
4. Singapore (17.6 million visitors)
5. Macau, China (17.3 million visitors)
6. Paris (15.8 million visitors)
7. Dubai, UAE (15.8 million visitors)
8. New York City (13.1 million visitors)
9. Kuala Lumpur, Malaysia (12.8 million visitors)
10. Shenzhen, China (12.1 million visitors)
.
சுமார் 10.1 மில்லியன் பயணிகளை கொண்ட டெல்லி 13 ஆம் இடத்தில் உள்ளது.
.
ஜெர்மனியின் Berlin நகர் 5.6 மில்லியன் பயணிகளை கவர்ந்து 36 ஆம் இடத்தில் உள்ளது.
.
2018 ஆம் ஆண்டில் Hong Kong இதுவரை 29.83 மில்லியன் பயணிகளை பெற்று தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.
.