அமெரிக்காவுக்கு தேவையான தொழிநுட்ப ஊழியர்கள் இல்லாதபோது அந்த வேலைவாய்ப்புகளை நிரப்ப H1B விசா (non-immigrant visa) மூலம் தற்காலிக ஊழியர்களை அழைப்பதுண்டு. தற்போது வருடம் ஒன்றில் சுமார் 400,000 H1B விசாக்களை உலகம் எங்கும் அமெரிக்கா வழங்கிகிறது.
.
ஆனால் 75% H1B விசாக்கள் இந்தியர்களுக்கே கிடைக்கின்றன. இவ்வாறு பெரும் பகுதி விசாக்களை கைப்பற்ற இந்திய தொழிநுட்ப நிறுவனங்களை பல குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றன.
.
அதேவேளை H1B விசா மூலம் அமெரிக்கா செல்லும் ஊழியர்களில் 90% ஆண்களே. அமெரிக்க சட்டப்படி H1B விசா கொண்டிருப்போர் தமது துணைவரை H4 (non-immigrant visa) விசா மூலம் அமெரிக்கா அழைக்கலாம். அதன்படி சுமார் 270,000 இந்திய துணைவிமார் அமெரிக்கா செல்ல சந்தர்ப்பம் கொண்டுள்ளனர்.
.
ஒபாமா ஆட்சியில், 2015 ஆம் ஆண்டில், H4 விசா கொண்டிருப்போர் அமெரிக்காவில் வேலை செய்யும் தகுதியை அடைய வழி செய்யப்பட்டது.
.
தற்போது ரம்ப் அரசு H4 விசா கொண்டுள்ளோர்க்கு வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை நிறுத்த முயல்கிறது. இதை ரம்ப் காங்கிரசின் ஆதரவு இன்றி சட்டமாக்க முடியும். அவ்வாறு சட்டம் மாறினால் பல இந்திய H4 மனைவிமார் அமெரிக்காவில் வேலை செய்யும் தகுதியை இழப்பர்.
.