இணக்கம் இன்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெறியேறுமாயின் அது பிரித்தானியாவை பொருளாதார மந்த நிலைக்கு (recession) தள்ளலாம் என்று எச்சரித்துள்ளது பிரித்தானிய மத்திய வங்கி (Bank of England).
.
இந்த வங்கியின் கணிப்பின்படி இணக்கம் இன்றிய பிரிவு பிரித்தானியாவின் பொருளாதாரத்தை சுமார் 8% ஆல் குறைக்கலாம். அத்துடன் பிரித்தானியாவில் உள்ள வீடுகளின் விலை சுமார் 33% ஆல் குறையலாம் என்றும் கூறியுள்ளது Bank of England. அதேவேளை பிரித்தானியாவின் நாணயமான pound சுமார் 25% பெறுமதியை இழக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
.
பிரித்தானியாவின் வேலைவாய்ப்பு இன்மையும் சுமார் 7.5% ஆக உயரலாம் என்று கருதப்படுகிறது.
.
அவ்வாறு பிரித்தானியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாலும், 2023 ஆம் ஆண்டளவில் அந்நாட்டு பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
.
அதேவேலை பிரிவை ஆதரிக்கும் எதிர் கட்சியினர் Bank of England மக்களை கிலி கொள்ள வைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
.