மரணித்த திமிங்கிலத்துள் 115 cups, 25 bags…

Whale

அண்மையில் மரணித்த திமிங்கிலம் ஒன்று இந்தோனேசியா கரையில் ஒதுங்கி உள்ளது. உருக்குலைந்த அந்த திமிங்கிலத்து வயிற்றுள் சிறியனவும், பெரியனவுமாக சுமார் 1000 பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளமை அறியப்பட்டுள்ளது.
.
அந்த திமிங்கிலம் மரணிக்க அது உட்கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்படாது இருப்பினும், அந்த அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒரு திமிங்கிலத்துள் இருப்பது மனிதத்தின் வளர்ச்சியால் உருவாகும் பாரதூர பக்கவிளைவுகளை காட்டியுள்ளது.
.
சுமார் 9.5 மீட்டர் நீளமான இந்த திமிங்கிலத்துள் (sperm whale) இருந்த பொருட்களுள் 115 plastic cups, 4 plastic போத்தல்கள், 25 plastic bags, 2 பாதணிகள், 1 nylon bag என்பனவும் அடங்கும்.
.
ஒவ்வொரு வருடமும் சுமார் 8 மில்லியன் தொன் பிளாஸ்டிக் கடலுள் வீசப்படுகிறது. அதனால் சுமார் 150 மில்லியன் தொன் பிளாஸ்டிக் கடல்களுள் உள்ளது.
.
குறைந்தது 5 பெரும் பிளாஸ்டிக் கூடங்கள் கடல்களுள் மிதந்து வருகின்றன. அதில் மிக பெரியது கலிபோர்னியா மாநிலத்துக்கும், ஹவாய் தீவுக்கும் இடையில் பசுபிக் சமுத்திரத்துள் உள்ளது. இந்த பிளாஸ்டிக் கூடத்தின் பரப்பளவு Texas மாநிலம் அளவிலானது.
.