சவுதி சகோதரிகள் மரணத்திலும் சந்தேகம்

Farea

அமெரிக்காவின் நியூ யார்கில் (New York) நகரில் உள்ள ஆறு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட சவுதி குடியுரிமை கொண்ட இரண்டு சகோதரிகளின் உடல்கள் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன. துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்தில் வைத்து சவுதி பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட இக்காலத்தில், இந்த சகோதரிகளின் மரணங்களும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன.
.
அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நியூ யார்க் பகுதில் உள்ள Hudson River என்ற ஆற்றில் இருந்து இரண்டு பெண்களின் உடல்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. இந்த உடல்கள் ஒருவரை ஒருவர் பார்த்த நிலையில் duct tape களால் வரிந்து கட்டப்பட்டிருந்தன. இவர்கள் கொலை செய்யப்பட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என்பது இதுவரை அறியப்படவில்லை.
.
உடல்களை அடையாளம் காணமுடியாத நிலையில், போலீசார் இவர்களின் படங்களை பகிரங்கப்படுத்தி அடையாளம் காண முனைந்துள்ளனர். அப்போதே இவர்கள் 16 வயதுடைய Tala Farea மற்றும் 23 வயதுடைய Rotana Farea ஆகிய சகோதரிகள் என்று அறியப்பட்டுள்ளது.
.
ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த இரண்டு சகோதரிகளும், அவர்களின் தாயாரும் 2015 ஆண்டில் அமெரிக்கா சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மூவரும் அமெரிக்காவில் அகதி நிலைக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
.
Washington, DC பகுதில் குடியிருந்த சகோதரிகள், credit card பாவனை தடயங்களின்படி, செப்டம்பர் 1 ஆம் திகதி நியூ யார்க் வந்திக்கலாம் என்று அமெரிக்க போலீசார் கருதுகின்றனர். செப்டம்பர் 12 ஆம் திகதி இவர்களை காணவில்லை என போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது.
.
இவர்களின் மரணத்தை அறிந்த தாயார், தனக்கு அமெரிக்காவில் உள்ள தூதுவராகத்தில் இருந்து ஒருதினம் முன்னர் வந்த தொலைபேசி ஒன்று அகதிநிலை விண்ணப்பத்தை கைவிட்டு, தம்மை சவுதி திரும்பும்படி கூறியதாக தெரிவித்துள்ளார். சவுதி தூதுவராகம் அதை மறுத்துள்ளது.

.