உள்ளுர் நேரப்படி வெள்ளி மாலை 6:30 மணியளவில் இந்தியாவின் புஞ்சாப் (Punjab) மாநிலத்தில் உள்ள Amritsar நகரில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்றுக்கு குறைந்தது 60 பேர் பலியாகியும், மேலும் 100 பேர் வரை காயப்பட்டும் உள்ளனர்.
.
மேற்படி மக்கள் ரயில் பாதை வழியே நின்று பத்து தலை இராவணனை எரிக்கும் Dusshera என்ற இந்து பண்டிகையையும், அப்போது நடாத்தப்பட்ட வாணவேடிக்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே அவ்வழியே வந்த ரயில் இவர்களை மோதி உள்ளது.
.
கேளிக்கைகளை அண்மையில் நின்று பார்த்த மக்களை வாணவேடிக்கைகளின் போது பின்னோக்கி செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது மக்கள் ரயில் பாதையோரம் சென்றுள்ளனர். அந்நேரம் அவ்வழியே வந்த Jalandhar நகரில் இருந்து Amritsar செல்லும் ரயில் இவர்களை மோதி உள்ளது.
.
மத்திய அரசு மரணித்தோர் குடும்பங்களுக்கு 2 இலச்சம் ரூபாய்களும், காயப்பட்டோர்க்கு 50,000 ரூபாய்களும் வழங்க முன்வந்துள்ளது.
.