Microsoft ஆரம்பிப்பாளர் Paul Allen மரணம்

Microsoft

Microsoft என்ற பலம் வாய்ந்த software நிறுவனத்தை Bill Gates உடன் இணைந்து உருவாக்கிய Paul Allen என்பவர் இன்று தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். Non-Hodgkin’s lymphoma என்ற வகை புற்று நோய்க்கே இவர் பலியாகினார்.
.
1975 ஆம் ஆண்டு இவரும், Bill Gates உம் இணைந்து IBM நிறுவனத்துக்கு operating system வழங்கும் உரிமையை பெற்று இருந்தனர். அப்போது அவர்களிடம் அவ்வகை operating system இருந்திருக்கவில்லை. அதனால் இவர்கள் Tim Paterson என்பவர் எழுதிய Quick and Dirty Operating System (QDOS) என்ற operating systemதை கொள்வனவு செய்து, Disk Operating System (DOS) என்று பெயர் மாற்றி, IBM க்கு வழங்கினர். வீட்டுக்குவீடு கணனிகள் பரவியதால் இருவரும் விரைவில் செல்வந்தர் ஆகினர்.
.
நோய் காரணமாக Paul Allen 1983 ஆம் ஆண்டில் Microsoft நிறுவனத்தில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் அவரிடம் பெருமளவு Microsoft பங்குகள் இருந்தன. இவரின் மொத்த சொத்துக்களின் பெறுமதி சுமார் $20 பில்லியன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர் இதுவரை சுமார் $2 பில்லியன் பெறுமதியை தானமாக வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரிடம் தற்போது 100 மில்லியன் Microsoft பங்குகள் உண்டு. அந்த பங்கு ஒன்றின் இன்றைய பெறுமதி $107.60. இவர் உலகின் 26வது பணக்காரர்.
.
சட்டப்படி திருமணமாகாத இவருக்கு பிள்ளைகள் இல்லை.
.