அமெரிக்கா, தலிபான் நேரடி பேச்சு

Afhanistan

அமெரிக்க ரம்ப் அரசின் பிரமுகரான Zabiullah Mujahid கடந்த கிழமை கட்டாரில் (Qatar) நேரடியாக சந்தித்து பேசியுள்ளனர். அமெரிக்கா தலைமையில், நியூயார்கில் இடம்பெற்ற 9/11 தாக்குதலுக்கு பின்னர், ஆப்கானித்தானில் தொடுக்கப்பட்ட யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரவே இந்த முயற்சி ஆகும்.
.
சுமார் 17 வருடங்களாக  தலிபானுடன் போரிட்டு, அவர்களை அழிக்க முடியாமலும், ஆப்கானிஸ்தானில் ஒரு அமைதியான ஆட்சியை ஏற்படுத்த முடியாத நிலையிலும் உள்ள அமெரிக்கா தற்போது தலிபானுடன் நேரடியாக பேச முனைகிறது.
.
அமெரிக்கா தரப்பில் பேச்சுக்களை நடாத்த முனையும் Zabiullah Mujahid தற்போது ஓர் அமெரிக்கர் ஆகினும், இவர் ஆப்கானிஸ்தானில் பிறந்தவரே. அத்துடன் இவர் சோவியத் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது CIAயின் செயல்பாடுகளிலும் பங்கு கொண்டிருந்தவர். அப்போது ஆப்கானித்தானின் முஜாகுதீன்களுடன் நெருக்கமாக இருந்தவர். முஜாகுதீன்கள் பின்னர் தலிபான் ஆனார்கள்.
.
சில கிழமைகளுக்கு முன்னரே ரம்ப் Zabiullah Mujahidடை ஆப்கான் சமாதான பிரதிநிதியாக நியமித்து இருந்தார். அதன்பின் இவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கட்டார் ஆகிய இடங்களுக்கு பயணித்து உள்ளார்.
.
அமெரிக்கா, பாகிஸ்தான், ஈரான், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் குறிவைத்துள்ள ஆப்கான் குழப்பம் இலகுவில் தீரும் நிலையில் இல்லை.

.