இந்திய ICICI வங்கி CEOவின் பதவி பறிப்பு

ICICI

இந்தியாவின் பிரபல தனியார் வங்கியான ICICI Bank (Industrial Credit and Investment Corporation of India) CEO பதிவியில் இருந்த Chanda Kochchar என்பவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர் மீது அண்மையில் இடம்பெற்ற ஊழல் விசாரணை ஒன்றின் பின்னரே பதவி பறிக்கப்பட்டுள்ளது.
.
மேற்படி பெண் ICICI வங்கியின் CEO மற்றும் Managing Director ஆக பதவி வகித்த காலத்தில் அந்த வாங்கி Videocon Group என்ற நிறுவனத்துக்கு வழங்கிய கடன் தொடர்பாக ஊழல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Chanda Kochcharரின் கணவர் Deepak Kochchar என்பருக்கும், Videocon Group நிறுவன Chairman பதவியில் உள்ள Venugopal Dhoot என்பவரும் இடையே வர்த்தக தொடர்புகள் இருந்தமை இப்போது தெரிய வந்துள்ளது.
.
விசாரணைக்கு உள்ளன இந்த கடன் சுமார் $443 மில்லியன் பெறுமதியான.
.
Forbes சஞ்சிகையின் 2016 ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 100 முக்கிய பெண்களில் Chanda Kochchar ரும் ஒருவர்.
.
இந்தியாவின் அரச மற்றும் தனியார் வங்கிகளின் குளறுபடிகளை களைய இந்திய அரசு முயற்சி செய்கிறது.

.