சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள Beijing Foreign Studies Universityயில் இந்த தவணை முதல் தமிழ் மொழிக்கான 4-வருட பட்டதாரி (Bachelor’s) படிப்பு நடைமுறை செய்யப்பட்டுள்ளது. இம்முறை 10 சீன மாணவர்கள் இந்த பட்டதாரி படிப்பை தொடர்கின்றனர்.
.
இங்கு ஏற்கனவே இந்தி (Hindi) மற்றும் வங்காள (Bengali) மொழிகளுக்கான பட்டதாரி படிப்புகள் இடம்பெறுகின்றன.
.
தமிழ் துறைக்கு பொறுப்பாக உள்ள ஈஸ்வரி என்ற புனைபெயரை கொண்ட Zhou Xin தான் தமிழை 15 வருடங்களுக்கு முன்னர் கற்றேன் என்றுள்ளார்.
.
இந்த மாணவர்கள் தமது படிப்பின் 3ஆம் வருடத்தில் தமிநாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளுவார். அங்கு அவர்கள் குறைந்தது 6 மாதங்களுக்கு தங்கி இருப்பர் என்றும் கூறப்படுகிறது.
.
1941 ஆம் ஆண்டு ஆரபிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் வருடாந்தம் சுமார் 8,000 மாணவர் கல்வி கற்பர்.
.