இலான் மஸ்க் (Elon Musk) என்ற பிரபல தொழில்நுட்ப துறை வர்த்தகர் மீது அமெரிக்காவின் SEC (Securities and Exchange Commission) பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டை பதிந்துள்ளது.
.
1971 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் பிறந்த இவர் தனது 17ஆவது வயதில் கனடாவுக்கு இடம்பெயர்ந்து இருந்தார். கனடாவின் Queen’s Universityயில் பயில ஆரம்பித்த இவர் இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்கா சென்று தனது உயர் படிப்பை தொடர்ந்தார்.
.
முதலில் Zip2 என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை வேறு சிலருடன் இணைந்து ஆரம்பித்தார். 1999 ஆம் ஆண்டில் Zip2 நிறுவனம் Compaq நிறுவனத்துக்கு $340 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாவதாக இவர் இணைந்து உருவாக்கிய X.com நிறுவனம் பின்னர் PayPal என்ற பிரபல நிறுவனமானது. PayPal நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் eBay நிறுவனத்தால் $1.5 பில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்டது.
.
பின்னர் இவர் SpaceX, Tesla (electric vehicle நிறுவனம்), SolarCity ஆகிய நிறுவனங்களை நிறுவினார். OpenAI, The Boring Company ஆகியன உருவாகவும் காரணமானார்.
.
Tesla வின் CEO ஆக உள்ள இவர் அண்மையில் Tesla தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட காரணமாகின. இவர் சவுதியின் முதலீட்டுடன் Tesla தனியார் வசமாகவுள்ளதாக கூறி இருந்தார். தனியார் வசமாகும்போது ஒவ்வொரு பங்கும் (stock) $420 க்கு கொள்வனவு செய்யப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த கூற்று உண்மை அல்ல என்று தெரிந்த போது Tesla வின் பங்கு சுமார் 12% ஆல் வீழ்ந்து இருந்தது.
.
இவர் $20.2 பில்லியன் சொத்துக்களை உடையவர் என்று கூறப்படுகிறது. அதனால் இவர் உலகின் 46 ஆவது பணக்காரர் ஆகிறார்.
.