ஆபிரிக்க நாடான அங்கோலாவின் (Angola) முன்னாள் ஜனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மகனான Zenu என்று அழைக்கப்படும் Jose Filomeno dos Santos அந்நாட்டு புதிய அரசால் ஊழல் குற்றசாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
.
Zenuவின் தந்தை அங்கோலாவை 1979 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டுவரை ஆட்சி செய்தவர். ஜனாதிபதியான தந்தை 2013 ஆம் ஆண்டில் 35 வயதான மகனை அங்கோலாவின் sovereign wealth fund குக்கு chairman ஆக நியமித்தார்.
.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதியாக கொண்ட புதிய அரசு தற்போது முன்னாள் ஜனாதிபத்தின் மகன் மீது ஊழல் வழக்குகளை ஆரம்பித்து உள்ளது. Zenu சுமார் $500 மில்லியன் பொது பணத்தை களவாடியதாக கூறப்படுகிறது.
.
சுமார் $2.5 பில்லியன் பொது நிதியானது Quantum Global என்ற முதலீட்டு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு இருந்துள்ளது. Quantum Global என்ற நிறுவனம் JeanClaude Bastos de Morais என்ற அங்கோலா-சுவிஸ் வர்த்தகருக்கு உரியது. இந்த வர்த்தகர் Zenuவின் வர்த்தக கூட்டாளி ஆவார்.
.
புதிய அரசு முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பல உயர் அதிகாரிகளையும் பதிவு நீக்கம் செய்து வருகிறது.
.
Isabel dos Santos என்ற முன்னாள் ஜனாதிபதியின் மகளின் எண்ணெய்வள தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இவரே ஆபிரிக்காவின் முதலாவது பெரிய பணக்கார பெண் ஆவார். 2017 ஆம் ஆண்டில் இவரிடம் இருந்த மொத்த சொத்துக்கள் $3.5 பில்லியன் என்று கூறப்படுகிறது. இவர் தொலைத்தொடர்பு, வைர வர்த்தகம், உல்லாச பயணத்துறை ஆகிய வர்த்தகங்களில் முதலீடு செய்துள்ளார். ஐரோப்பாவில் தங்கி உள்ள இவர், சகோதரனின் கைதின் பின், நாடு திரும்பும் எண்ணத்தில் இல்லை.
.
IMF கூற்றுப்படி அண்மைய காலங்களில் அங்கோலாவின் $32 பில்லியன் எண்ணெய்வள வருமானம் தடயங்கள் எதுவும் இன்றி தொலைந்துள்ளது.
.