மாலைதீவு தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி?

Maldives

மாலைதீவில் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தாமே வென்றுள்ளதாக எதிர்க்கட்சி கூட்டணி கூறியுள்ளது. அத்துடன் எதிரணி வேட்பாளர் Ibrahim Mohamed Solih தனது ஆட்சியை அங்கரிக்குமாறும் கேட்டுள்ளார். இந்தியாவும் உடனடியாக எதிர்க்கட்சி தலைவரை வாழ்த்தி உள்ளது. ஆனால் மேலும் பல நாட்களுக்கு சட்டப்படியாக முடிவுகள் அறிவிக்கப்பட மாட்டாது.
.
தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி Abdulla Yameen இடம்பெற்ற தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவித்து இருக்கவில்லை.
.
தற்போதைய ஜனாதிபதியின் கட்சி (PPM, Progressive Party of Maldives) சீனாவின் ஆதரவையும், எதிர்க்கட்சி (MDP, Maldivian Democratic Party) இந்தியாவின் ஆதரவையும் கொடுள்ளன.
.
தற்போதைய ஜனாதிபதி Yameen 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வெற்றி மூலம் ஆட்சிக்கு வந்திருந்தார்.
.
எவர் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையைப்போல் இங்கும் சீனாவின் ஆளுமை தொடரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவே அல்லது அமெரிக்காவோ சீனாவுக்கு போட்டியாக முதலீடுகளை செய்ய முடியாது.

.