சமீப காலங்களில் சனத்தொகை பெருக்க வீதம் குறைந்த நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. உலக வங்கியின் கருத்துப்படி 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சனத்தொகை பெருக்கம் தாய்க்கு 1.2 குழந்தைகள். இந்த வீதம் சனத்தொகையை சமஅளவில் வைத்திருக்க போதுமானது இல்லை. சனத்தொகையை சம அளவில் வைத்திருக்க தாய்க்கு குறைந்தது 2.1 குழந்தையாவது தேவை. இவாறான குறைந்த சனத்தொகை [பெருக்க வீதம் விரைவில் சிங்கப்பூரின் மொத்த சனத்தொகையை குறைக்கும். அதுமட்டுமன்றி விரைவில் சிங்கப்பூரின் பெரும்பாலானோர் முதியோர்களாயும் சிறு தொகையினரே உழைக்கு, வரி செலுத்தும், சேவைசெய்யும் வயதினராகவும் இருப்பர்.
இந்த நிலையை திருத்த சிங்கபூர் அரசு அண்மையில் ஓர் புதிய திட்டத்தை அறிவித்தது. அதன்படி தற்போது 5.3 மில்லியன் ஆக இருக்கும் சிங்கபூர் சனத்தொகையை 2030 ஆண்டவில் 6.9 மில்லியன் ஆக அதிகரிப்பது. அவ்வாறு சனத்தொகையை அதிகரிப்பதற்கு அதிக அளவில் குடிவரவையும் அதிகரிக்க உள்ளது சிங்கப்பூர் அரசு – அதாவது வருடத்துக்கு சுமார் 30,000 புதிய குடிவரவாளர். ஆனால் இதை எதிர்க்கின்றனர் சிலர்.
சிங்கப்பூரின் வாழ்க்கை செலவீனம், வீட்டு வாடகை போன்றன மிகவும் அதிகரித்துள்ள இந்நிலையில், புதிய குடிவரவாளர் நிலைமையை மேலும் மோசமாக்குவர் என்கின்றனர் இந்த எதிர்ப்பாளர்.