​ஈரான்-சிரியா இராணுவ உடன்படிக்கை, இஸ்ரேல் குமுறல்

Syria

இந்த கிழமையின் ஆரம்பத்தில் ஈரானும், சிரியாவும் இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் ​இணங்கி இருந்தன. அதனால் குமுறுகின்றன இஸ்ரேலும், அமெரிக்காவும்.
.
லிபியாவின் கடாபியையே அழித்ததுபோல் சிரியாவின் அசாத்தையும் அழிக்க உள்நாட்டு யுத்தம் ஒன்றை அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் உருவாக்கி இருந்தன. ஆனால் ஈரானும், தென் லெபனானில் உள்ள பலமான இயக்கமான ஈரான் சார்பு ஹெஸ்புல்லாவும் அசாத்தின் உதவிக்கு வந்தன. யுத்தம் இழுப்பாட்டில் உள்ளபோது ரஷ்யாவும் அசாத்தின் உதவிக்கு வந்தது. இந்நிலையில் அசாத் சிரியாவின் தலைமயிலான அரசு கணிசமான வெற்றிகளை கொண்டது.
.
உதவிக்கு வந்த ஈரான் தற்போது சிரியாவில் தனது இராணுவத்தை நிரந்தரமாக நிலைகொள்ள முன்வந்துள்ளது. ஈரானின் விரோதியான இஸ்ரேலுக்கு ஈரான் தனது எல்லையில் நிரந்தரமாக நிலைகொள்வது விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
.
தற்போது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் அசாத் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தாலும், ஈரான் படைகள் அங்கிருந்து விலகினால் போதும் என்றாகி உள்ளது. ஈரானை சிரியாவில் இருந்து வெளியேற்ற அமெரிக்காவும், இஸ்ரேலும் ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளன.
.
அத்துடன் கடந்த சில நாட்களின் முன் சில அமெரிக்க அதிகாரிகள் இரகசியமாக அசாத்தை சிரியாவின் தலைநகர் சென்று சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
.
மறுபுறம் அமெரிக்கா தலைமயிலான மேற்கு நாடுகள், சிரியா இரசாயன ஆயுதங்களை பாவித்தால் தாம் மீண்டும் சிரியாவை தாக்கவுள்ளதாக கூறியுள்ளன. ஆனால் ரஷ்யா, மேற்கு நாடுகளே தமது கையாட்கள் மூலம் இரசாயன ஆயுதத்தை வெடிக்க வைத்து, அதை காரணமக்கி சிரியாவை தாக்க முனைவதாக கூறியுள்ளது.
.
இந்நிலையில் ரஷ்யா குறைந்தது 13 யுத்த கப்பல்களையும், 2 நீர்மூழ்கிகளையும் சிரியாவை நோக்கி நகர்த்தி உள்ளது.

.