நியூசிலாந்தில் வெளிநாட்டார் வீடு கொள்வனவு தடை

NewZealand2

இன்று புதன்கிழமை நியூசிலாந்தில் நடைமுறை செய்யப்பட்ட சட்டம் ஒன்றிப்படி வெளிநாட்டார் நியூசிலாந்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை கொள்வனவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டவர்களுக்கு இந்த தடை இல்லை.
.
சீனர் போன்ற செல்வம் மிக்க வெளிநாட்டவர் போட்டிக்கு அதிக பணம் செலுத்தி வீடுகளை கொள்வனவு செய்வதால் உள்ளூர் மக்கள் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாது உள்ளமையே இந்த புதிய சட்டத்துக்கு காரணம்.
.
கடந்த 10 வருடத்துள் அந்நாட்டில் வீட்டு விலை சுமார் 60% ஆல் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்துள் மட்டும் 6.2% ஆல் உயர்ந்துள்ளது. தற்போது நியூசிலாந்தில் சராசரி வீட்டு விலை U$361,000 ஆகும்.
.
ஏற்கனவே நியூசிலாந்தின் Auckland நகர் பகுதியில் 22% வீடுகளும், Queenstown நகர் பகுதியில் 5% வீடுகளும் வெளிநாட்டவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 வருடத்துள் Auckland நகரில் மட்டும் சராசரி வீட்டு விலை 70% ஆல் உயர்ந்துள்ளது.
.