ஐ. நா. பண பங்களிப்பில் சீனா இரண்டாம் இடம்

UN

ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN general budget) அதிக பண பங்களிப்பை செய்யும் இரண்டாவது நாடாக சீனா இடம்பெறவுள்ளது. 2019 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான ஐ. நா. செலவுகளின் 12.01% தொகையை சீனா வழங்கவுள்ளது.
.
இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ஜப்பான் 2019-2021 காலத்தில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும். 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐ. நா. செலவுகளின் 9.68% தொகையை ஜப்பானும், 7.92% தொகையை சீனாவும் செலுத்தி இருந்தன.
.
சீனாவின் அதிகரிக்கும் பண பங்களிப்பு, ஐ. நாவுள் சீனாவின் ஆதிக்கத்தையும் அதிகரிக்க செய்யும் என்று கருதப்படுகிறது.
.
அமெரிக்கா 22% தொகையை செலுத்துவதன் மூலம் தொடர்ந்தும் முதலாவது அதிகூடிய தொகையை செலுத்தும் நாடாக உள்ளது.
.
ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா கனடா ஆகிய நாடுகள் முறையே ஏனைய பெரும் தொகைகளை செலுத்தும் நாடுகளாக உள்ளன.
.
2016-2018 காலப்பகுதியில் இந்தியா 0.737% பங்களிப்பை மட்டுமே செய்துள்ளது. அதனால் இந்தியா 24 ஆம் இடத்தில் இருந்துள்ளது.
.