கடந்த செவ்வாய்க்கிழமை வடகொரியா சிறிய ஆனால் வலுமிக்க அணுக்குண்டு ஒன்றை வெடித்து மூன்றாவது முறையாக பரிசோதனை செய்துள்ளது. ஐ.நா., அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் உதாசீனம் செய்துவிட்டு வடகொரியா இந்த பரிசோதனையை நடாத்தியுள்ளது.1960 களில் USSR இன் உதவியுடன் இத்துறையில் செயல்பட தொடங்கிய வடகொரியா தனது முதல் அணுக்குண்டை 2006 பரிசோதனை செய்திருந்தது. பின்னர் இரண்டாவது பரிசோதனையை 2009 இல் செய்திருந்தது.
முதல் இரண்டு குண்டுகளும் புளுடோனியத்தை அடிப்படையாக கொண்டவை. ஆனால் மூன்றாவது குண்டு யுரேனியத்தை அடிப்படையாக கொண்டதாக கருதப்படுகிறது. இவ்வாறு சிறு அளவிலான குண்டையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கொண்ட வடகொரியா இலகுவில் அமெரிக்காவை தாக்கும் வல்லமையை அடையும் என கருதப்படுகிறது.
ஐ.நா.. அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தாலும் பதிலடியாக என்ன செய்வார்கள் என்று இன்னமும் தெரிவிக்கவில்லை. சீனாவின் ஆதரவின்றி இவர்கள் எதையும் செய்யவும் முடியாது.