சூரியனை நோக்கி நாசாவின் விண்கலம்

ParkerSolarProbe

நேற்று சனிக்கிழமை அமெரிக்காவின் நாசா (NASA) சூரியனை நோக்கி விண்கலம் (probe) ஒன்றை ஏவி உள்ளது. Parker Solar Probe என்ற இந்த விண்கலம் புளோரிடா (Florida) மாநிலத்தின் Cape Canaveral தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
.
இந்த விண்கலமே சூரியனுக்கு மிக அருகாக செல்லவுள்ள முதல் விண்கலமாகும். சூரியனுக்கு அருகில் வெப்பநிலை சுமார் 555,000 C என்று கூறப்படுகிறது. அதனால் இந்த விண்கலம் சூரியனில் இருந்து சுமார் 6 மில்லியன் km தொலைவிலேயே எரிந்து பயனற்று போகும் என்றும் கருதப்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் சுமார் 150 மில்லியன் km.
.
சூரியனை ஆராய செலுத்தப்படும் இந்த விண்கலத்துக்கு சுமார் $1.5 பில்லியன் செலவாகும். இது அடுத்துவரும் 7 வருடங்களுக்கு சூரியனை பல தடவைகள் வலம் வரும்.
.
சூரியனின் வெப்பத்தில் இருந்தும், கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், இந்த விண்கலம் 11.43 cm தடிப்பான கார்பன் (carbon) கவசத்தை கொண்டுள்ளது.
.
ஆரமப்த்தில் இக்கலம் பெரிய நீள்வளையத்தில் பறக்கும். படிப்படியாக து பறக்கும் நீள்வளைய பாதை சிறுத்து செல்லும். இறுதி நீள்வளைய பாதையில் இருக்கும்போது இது சுமார் 700,000 km/h வேகத்தில் பறக்கும்.
.