இன்று வியாழன் சவுதி அரேபியாவின் தலைமையிலான இராணுவ அணி யெமனில் (Yemen) நடாத்திய விமான தாக்குதலுக்கு 45 மாணவர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மேலும் சுமார் 43 மாணவர் காயம் அடைந்தும் உள்ளனர்.
.
மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பஸ் ஒன்று மீது செய்யப்பட்ட குண்டு தாக்குதலே மாணவர்கள் பலியாக காரணமாக இருந்துள்ளது. இந்த சிறுவர்கள் 10 வயது முதல் 13 வயதுடையோர் ஆவர்.
.
அதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மரணித்தோரில் குறைந்தது 29 பேர் 15 வயதுக்கும் குறைந்தோர் என்றுள்ளது.
.
ஐ. நா. செயலாளர் Antonio Guterres இந்த தாக்குதல் விசாரணை செய்யப்படல் வேண்டும் என்றுள்ளார். ஆனால் ஐ. நாவில் veto உரிமை கொண்ட அமெரிக்கா போன்ற சவுதி ஆதரவு நாடுகள் இந்த விடயத்தில் தலையிடாது மௌனமாக உள்ளன.
.
யெமென் யுத்தம் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இருந்தது. Houthis கிளர்ச்சியாளர் பெரும்பாலான நாட்டை கைப்பற்ற, அந்நாட்டு அரசு சவுதியின் ஆதரவை நாடியது. யெமென் அரசும், அமெரிக்காவும் Houthis கிளர்ச்சியாளருக்கு ஈரான் உதவுவதாக குற்றம் சாட்டின.
.
Houthis கிளர்ச்சியாளர் அவ்வப்போது சவுதியில் தாக்குதல் நடாத்துகின்றனர்.
.