இன்று செய்வாய் முதல் (00:01 EDT, New York நேரம்) முதல் அமெரிக்காவின் ஈரான் மீதான முதல் கட்ட பொருளாதார தடை நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்ட பொருளாதார தடை, குறிப்பாக எண்ணெய் வளம் மீதான தடை, நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைமுறைக்கு வரும்.
.
.
அமெரிக்காவின் இந்த தடை அமெரிக்க நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகள் செய்வதை தடுப்பது மட்டுமன்றி, அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் பிற நாட்டுகளின் நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகம் செய்வதையும் தடை செய்கிறது. இவ்வகை பக்கவிளைவு தடை காரணாமாக ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் விசனம் கொண்டுள்ளன.
.
.
ஜெர்மன், பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நிறுவனங்கள் அமெரிக்காவிலும், ஈரானிலும் வர்த்தகம் செய்கின்றன. இவை ஈரானில் செய்யும் வர்த்தகத்தை இடைநிறுத்தம் செய்ய நிர்பந்திக்கப்படாலம்.
.
.
ஐரோப்பிய ஒன்றியம் தனது நாடுகளை பக்கவிளைவு தடைகளில் இருந்து பாதுகாக்க blocking statute போன்ற சட்டங்களை முன்வைக்க முனைகிறது.
.
.
சீனா தொடர்ந்தும் முழு அளவில் ஈரானுடன் வர்த்தகத்தை செய்யவுள்ளதாக கூறியுள்ளது. ரஷ்யாவும் தொடர்ந்தும் ஈரானுடன் செயல்பட தீர்மானித்துள்ளது.
.
இந்தியா திடமான தீர்மானத்தை எடுக்க முடியாது தவிக்கிறது. அமெரிக்காவின் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் எதிர்பார்க்கும் இந்தியா, ஈரானையும் ஆதரிக்க விரும்புகிறது. பாகிஸ்தான்-சீனா வளர்ச்சியை எதிர்நோக்க, இந்தியாவுக்கு ஈரானின் உதவி தேவை.

நவம்பர் 5 ஆம் திகதி அளவிலேயே ஈரான் மீதான தடை தொடர்பான முழு தாக்கங்களும் உலகுக்கு தெரியவரும்.
.