அமெரிக்காவின் Apple நிறுவனம் இன்று உலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் சந்தை பெறுமதி கொண்ட பொது நிறுவனம் என்ற உயர்வை அடைந்துள்ளது. iPhone என்ற தொலைபேசி உட்பட சில தொலைத்தொடர்பு உபகரணங்களை தயாரிக்கும் Apple நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு (stock) ஒன்று இன்று $207.05 பெறுமதியை அடைந்த போதே அந்நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (market capital) 1 டில்லின் ($1,000,000,000,000) டாலர் ஆகியுள்ளது.
.
.
Apple தற்போது 4,829,926,000 பங்குளை (AAPL, NASDAQ) கொண்டுள்ளது. அதேவேளை இன்று அந்நிறுவன பங்குகள் $207.05 வரைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே அந்நிறுவன பங்குச்சந்தை பெறுமதி $1 ட்ரில்லியனை அடைந்துள்ளது.
.
.
இதற்குமுன், 2007 ஆம் ஆண்டில், சீனாவின் அரச நிறுவனமான PetroChina வும் (PTR) இவ்வாறு $1 டிரில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை அடைந்திருந்தது. ஆனால் PetroChina பெருமளவில் அரச உரிமைகொண்ட ஒரு அரச நிறுவனமாகும். தற்போது PetroChina நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி $205 பில்லியன் ($0.205 டிரில்லியன்) மட்டுமே.
.
.
அமெரிக்காவின் Amazon நிறுவனம் (AMZN) சுமார் $900 பில்லியன் ($0.9 டிரில்லியன்) பங்குச்சந்தை பெறுமதியை கொண்டு தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.
.
.