மரணித்த குட்டியை சுமக்கும் ஓர்கா திமிங்கிலம்

Whale_J35

ஜூலை மாதம் 24 ஆம் திகதி பிறந்து, சிறிது நேரத்தில் மரணமாகிய தனது பிள்ளையை தற்போதும் (ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை) சுமந்து திரிகிறது J-35 என்று இலக்கம் இடப்பட்ட தாய் ஓர்கா திமிங்கிலம் (orca whale, killer wale). கனடாவின் வான்கூவர் (Vancouver), மற்றும் அமெரிக்காவின் சியாற்றல் (Seattle) பகுதிகளுக்கு அண்டிய கடலில் நிகழும் இந்த துயரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து அவதானித்து வருகின்றனர்.
.
சிலவேளைகளில் தாய் திமிங்கிலம் தனது பிள்ளை இன்றியும் காணப்படுள்ளது. அதனால் மரணித்த திமிங்கில குட்டியை (calf) வேறு திமிங்கிலங்களும் காவி உதிவி புரிகின்றனவா என்றும் ஆய்வாளர் சந்தேகிக்கின்றனர். ஆனால் வேறு திமிங்கிலங்கள் அவ்வாறு மரணித்த குட்டியை காவுவது அதிகாரிகளின் கண்ணுக்கு இதுவரை அகப்படவில்லை.
.
சுமார் 23 ஓர்கா திமிங்கிலங்கள் கொண்ட கூட்டம் (pod) ஒன்றின் அங்கமாகவே மரணித்த குட்டியை கொண்ட தாய் உள்ளது. முலையூட்டிகளான ஓர்கா திமிங்கிலங்கள் விரைவாக அருகிவரும் கடல்வாழ் உயிரினமாகும்.
.
பிறக்கும்போது ஓர்கா திமிங்கிலங்கள் சுமார் 200 kg எடை கொண்டதாக இருக்கும். வளர்ந்த பெண் திமிங்கிலங்கள் 1,400 முதல் 2,800 kg எடையை கொண்டிருக்கும்.
.
தாய் குட்டியை கைவிடும் நேரத்தில் ஆய்வாளர்கள் குட்டியின் உடலை கைப்பற்றி மரணத்தின் காரணத்தை அறிய உள்ளனர்.
.