கிரேக்கத்தின் (Greece) தலைநகரான எதன்ஸ் (Athens) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு (wildfire) இதுவரை குறைந்தது 74 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 170 படுகாயம் அடைந்துள்ளனர். பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது.
.
.
திங்கள்கிழமை முதல் எதன்ஸ் நகருக்கு கிழக்கே ஒரு தீயும், மேற்கே ஒரு தீயுமாக இரண்டு காட்டுத்தீகள் வேகமாக பரவியுள்ளன. தீக்குள் அகப்பட்ட பலர் கடற்கரைகளுக்கு தப்பியோட, அங்கிருந்து வள்ளங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் சிலர் நீந்த முனைந்து கடலுள் பலியாகினர்.
.
.
அதேவேளை இன்னோர் கடற்கரை வாடி ஒன்றின் அருகே 26 உடல்கள் செஞ்சிலுவை சங்கத்தினால் கண்டுபிடிக்கப்படுள்ளது.
.
.
செய்வாய்க்கிழமை பெருமளவு தீ கட்டுப்பாட்டுள் வந்திருந்தாலும், பல இடங்களில் தீ தொடர்ந்தும் பரவி வருகிறது.
.
.
ஜெர்மனி, இத்தாலி, சைப்ரஸ், குரோசியா ஆகிய நாடுகள் உதவிக்கு விரைந்துள்ளன.
.
.
2007 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் Evia தீவில் ஏற்பட்ட தீக்கு 77 பேர் பலியாகி இருந்தனர்.
.
.
சுவீடன், பின்லாந்து, நோர்வே, லட்வியா ஆகிய நாடுகளும் தற்போது காட்டுத்தீக்களால் பாதிக்கப்பட்டு உள்ளன. சுவீடனில் அதிகூடிய வெப்பநிலை 35 C அளவில் உள்ளது.
.
.
அதேவேளை ஜப்பானிலும் வெப்பநிலை அதீதமாக உள்ளது. அங்கும் சுமார் 60 பேர் இதுவரை வெப்பத்துக்கு பலியாகி உள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் 11 பேர் பலியாகினர். நேற்று திங்கள் Kumagaya என்ற நகரில் வெப்பநிலை 41.1 C ஆக உயர்ந்திருந்தது. இது வளமையான வெப்பநிலையில் 12 C அதிகமாகும்.
.
இன்று செய்வாய் ஜப்பானின் Mino நகரில் வெப்பநிலை 39 C வரை உயர்ந்துள்ளது.
.
.
இன்று செய்வாய் ஜப்பானின் Mino நகரில் வெப்பநிலை 39 C வரை உயர்ந்துள்ளது.
.
ஜூலை மாத ஆரம்பத்தில் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் அதீத வெப்பத்துக்கு சுமார் 70 பேர் பலியாகி இருந்தனர்.
.