காடையருக்கு மாலை போட்ட ஹாவர்ட் கல்விமான்

Sinha

அண்மையில் அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்திய அரசியல்வாதி ஒருவர் தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரை பா.ஜ கட்சியின் Civil Aviation அமைச்சர் Jayant Sinha தொடர்பானது.
.
Sinhaவின் தொகுதியில் இந்து காடையர்கள் சிலர் Alimuddin Ansari என்ற ஒரு இஸ்லாமிய வர்த்தகரை அவரின் வாகனத்தில் இருந்து இழுத்து வன்மையாக தாக்கி உள்ளனர். அந்த இஸ்லாமிய வர்த்தகர் மாட்டு இறைச்சி கடத்துகிறார் என்றே கூறி தாக்கப்பட்டார்.
.
அந்த இஸ்லாமியரை மீட்ட போலீசார், வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். ஆனால் வன்மையாக தாக்கப்பட்ட அந்த இஸ்லாமியர் பின்னர் இறந்துள்ளார்.
.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட 8 தாக்குதல்காரர்கள் இந்திய நீதிமன்றால் குற்றவாளிகள் என தண்டனை பெற்றனர். ஆனால் அப்பீல் காரணமாக அந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மாலை போட்டு வரவேற்ற Sinha, தன் வீட்டில் பெரும் விருந்துபசாரமும் செய்துள்ளார்.
.
இவ்வாறு குற்றவாளிகளுக்கு மாலைபோட்ட Sinha இந்தியாவில் பிறந்திருந்தாலும், அமெரிக்கா சென்று ஹாவார்ட் (Harvard University) கல்வி பயின்றவர். அத்துடன் அமெரிக்காவின் பாஸ்ரன் (Boston) நகர் பகுதியில் உயர்ந்த பதிவிகளை வகித்தவர். அங்கு அவருக்கு பெரும் சொத்துக்கள் உண்டு. அவரின் மனைவி தற்போதும் அமெரிக்காவிலேயே வசிக்கிறார்.
.
Sinhaவின் தந்தையும் ஒரு பா.ஜ கட்சியின் முக்கிய பிரமுகரே. தந்தையின் தொகுதியிலேயே மகனும் போட்டியிட்டு வென்றிருந்தார்.
.

2017 ஆம் ஆண்டில் International Consortium of Investigative Journalism வெளியிட்ட Paradise Papers என்ற ஊழல் அறிக்கையிலும் Sinhaவின் பெயர் இடம்பெற்று இருந்தது.
.