பின்லாந்தின் (Finland) தலைநகரான கெல்சிங்கியில் (Helsinki) ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டினை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ரம்ப், 2016 ஆண்டின் ஊடுருவல் தொடர்பான தனது நாட்டு புலனாய்வு அமைப்பான FBIயின் விசாரணை முடிவுகளை நம்பாது, புட்டினின் கூற்றை நம்புவதாக கூறியிருந்தார். அதனால் பலத்த எதிர்ப்புகளை அமெரிக்காவில் எதிர்கொண்ட ரம்ப், நேற்று தனது கூற்றில் ‘not’ தவறிவிட்டது என்றுள்ளார்.
.
2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற காலத்தில், அந்த தேர்தல் முடிவுகளை மாற்றும் நோக்கில், ரஷ்ய அமெரிக்காவின் அரசியல் அமைப்புகளின் கணனிகளை ஊடுருவி இருந்தது என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதை விசாரணை செய்த அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI, ரஷ்யாவே அந்த ஊடுருவலை செய்திருந்தது என்று புலனாய்வு செய்திருந்தது.
.
.
ஆனால் ரம்பிடம் இது தொடர்பாக கேள்வி கேட்டபோது அவர் புட்டின் தாம் அவ்வாறு செய்யவில்லை என்று கூறுகிறார் என்றும் “I don’t see any reason why it WOULD be” என்றும் கூறியுள்ளார். அதாவது புட்டினின் கூற்றை நிராகரிக்க தன்னிடம் காரணம் இருந்திருக்கவில்லை என்றுள்ளார்.
.
.
ஆனால் நேற்று தனது கூற்றை திருத்தும் நோக்கில், தனது கூற்றில் not என்ற சொல் தவறிவிட்டது என்றுள்ளார் ஜனாதிபதி ரம்ப். தனது கூற்று “I don’t see any reason why it WOULDN’T be” என்று அமையவேண்டும் என்றுள்ளார்.
.
.
ரம்ப் தனது கூற்றை திருத்த முயன்றாலும், அவரின் திருத்தம் எவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ரஷ்யா மட்டுமே காரணி என்று FBI ஆய்வு முடிவில் கூறியிருந்தாலும், ரம்ப் தனது திருத்த கூற்றின் பின்னரும் ரஷ்ய மட்டுமல்லாது வேறு சிலரும் இதை செய்திருக்கலாம் என்று மீண்டும் FBIயின் புலனாய்வை சந்தேகித்துள்ளார். ரம்ப் தனது திருத்த உரையிலும் “Could be other people also” என்றுள்ளார்.
.
.
அதேவேளை ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov ரம்ப்-புட்டின் சந்திப்பை “better than super” என்று விபரித்துள்ளார்.
.