பிரித்தானியாவுக்கும் குரேசியாவுக்கும் (Croatia) இடையில் இன்று இடம்பெற்ற FIFA கிண்ணத்துக்கான அரை-இறுதி (Semi-final) ஆட்டத்தில் குரேசியா வென்றுள்ளது (குரேசியா 2 : இங்கிலாந்து 1). அதனால் குரேசியா இறுதி போட்டிக்கு (Final) தெரிவாகி உள்ளது.
.
.
ஏற்கனேவே பெல்ஜியத்துடன் போட்டியிட்ட பிரான்ஸும் வெற்றி பெற்று (1:0) இறுதி போட்டிக்கு தெரிவாகி இருந்தது. அதன்படி பிரான்சும், குரேசியாவும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களுக்கான போட்டியில் வரும் ஞாயிற்று கிழமை, 15ஆம் திகதி விளையாடும்.
.
.
பிரான்சிடம் தோல்வி கண்ட பெல்ஜியமும், குரேசியாவிடம் தோல்வி கண்ட இங்கிலாந்தும் வரும் சனிக்கிழமை 14ஆம் திகதி மூன்றாம் இடத்துக்கு (play-off) போட்டியிடும்.
.
.
பிரான்ஸ் முன்னொருதடவை, 1998ஆம் ஆண்டில், FIFA கிண்ணத்தை வென்றிருந்தது. அதே வருடம் குரேசியா 3ஆம் இடத்தை வென்றிருந்தது.
.
1990 ஆம் ஆண்டுக்கு முன் குரேசியா நாடானது யுகோசிலாவியா நாட்டின் அங்கமாக இருந்தது.
.