தாய்லாந்து குகை ஒன்றுள் அகப்பட்டு இருந்த 12 இளைஞர்களையும் அவர்களின் உதைபந்தாட்ட ஆசிரியரையும் மீட்கும் பணி தற்போது 4 இளைஞர்களை மீட்டுள்ளது. ஏனையோரை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
.
இவர்கள் அனைவரும் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் அந்த குகைக்குள் அகப்பட்டுள்ளார். இவர்கள் குகைக்குள் பல கிலோமீட்டர் தூரம் சென்றபின், கடும் மழை காரணமாக, இவர்கள் உள்ள இடத்துக்கும், குகையின் வாசலுக்கும் இடையில் பல இடங்கள் வெள்ளத்தால் நிரம்பி உள்ளது. பள்ளமான குகை பகுதிகள் நீரால் முற்றாக நிறைந்ததால், சில இடங்களில் நீண்ட நீரம் சுழியோடியே வெறியேற முடியும்.
.
அகப்பட்டவர்களை மீட்டுக்கும் பணியில் ஈடுபட்ட இராணுவ சுழியோடி ஒருவர் சுவாசிக்க போதுமான வளி இன்மையால் மரணமாகியும் உள்ளார். அகப்பட்டவர் உள்ள இடத்துக்கு ஒருதடவை சென்று மீண்டும் வெளிவர சுமார் 11 மணித்தியாலங்கள் தேவை என்று கூறப்படுகிறது.
.
மீண்டும் அப்பகுதியில் பெரும் மழை பொழிய உள்ளதால் மீட்பு பணிகள் ஆபத்துகள் உள்ள நிலையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுழியோடிகள் ஒவ்வொரு இளைஞராக வெளியே எடுத்துவர வேண்டும்.
.
உள்ளே உள்ளவர்களின் சுவாசத்துக்கு தேவையான வளி தொடர்ந்தும் செலுத்தப்படுகிறது.
.