இந்தியாவிலும் அருகிவரும் தமிழ்

IndiaFirstLanguage

2011 ஆண்டுக்கான இந்தியாவின் புள்ளிவிபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி தமிழ் போன்ற திராவிட மொழியை முதல் மொழியாக பேசுவோர் வீதம் இந்தியாவில் குறைந்து வருகிறது. அதேவேளை ஹிந்தியை முதல் மொழியாக பேசுவோர் வீதம் அதிகரித்து வந்துள்ளது.
.
2011 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி இந்தியாவில் 43.63% மக்கள் (மக்கள் தொகை: 528,347,193) ஹிந்தியை முதல் மொழியாக பேசியுள்ளார்.
.
அதேவேளை Bengali பேசுவோர் 8.03% (97,237,669) ஆகவும், Marathi பேசுவோர் 6.86% (83,026,680) ஆகவும், Telugu பேசுவோர் 6.70% (81,127,740) ஆகவும், தமிழ் பேசுவோர் 5.70% (69,026,881) ஆகவும், Gujarati பேசுவோர் 4.58% (55,492,554) ஆகவும், Urdu பேசுவோர் 4.19% (50,772,631) ஆகவும், Odia பேசுவோர் 3.10% (37,521,324) ஆகவும், மலையாளம் பேசுவோர் 2.88% (34,838,819) ஆகவும் இருந்துள்ளனர்.
.
ஆச்சரியப்படும் வகையில் ஆதி மொழியான சமஸ்கிருதம் 24,821 இந்தியர்களால் மட்டுமே முதல் மொழியாக பேசப்படுகிறது.
.

தமிழை முதல் மொழியாக பேசுவோர் வீதம் 1971 ஆம் ஆண்டில் 6.88% மாக இருந்துள்ளது. இது 1991 ஆம் ஆண்டில் 6.32% ஆகி, 2001 ஆம் ஆண்டில் 5.91% ஆகை, 2011 ஆம் ஆண்டில் 5.70% ஆக குறைந்துள்ளது. 1981 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டு தரவுகள் வெள்ளத்தால் அழிந்து போனதாக கூறப்படுகிறது.
.

IndiaFirstLanguage2