New York Times நிருபர்களுக்கு மிரட்டல்

NewYorkTimes

அமெரிக்காவின் New York Times பத்திரிகை இலங்கையின் முன்னாள் ராஜபக்ச அரசுக்கும், சீனாவுக்கும் இடையில் இருந்த உறவு தொடர்பாக கட்டுரை ஒன்றை ஜூன் 26 ஆம் திகதி வெளியிட்டு இருந்தது. அந்த கட்டுரையால் விசனம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி தரப்பு இலங்கையில் நிலைகொண்டுள்ள New York Times நிருபர்கள் மீது வசைபாட ஆரம்பித்துள்ளது என்கிறது New York Times.
.
மேற்படி பத்திரிகையாளர் உட்பட அனைத்து பத்திரிகையாளர்களையும் பாதுகாப்பது இலங்கை அரசின் கடமை என்றுள்ளார் New York Times பத்திரிகையின் சர்வதேச பிரிவு ஆசிரியர் Michael Slackman.
.
Dharisha Bastians, Arthur Wamanan, Maria Abi-Habib ஆகியோரே இந்த வசைபாடலுக்கு உள்ளன New York Times ஊழியர்கள் ஆவார். இவர்கள் பணம் பெற்று, ராஜபக்ச குடும்பத்துக்கு அவமானம் ஏற்படுத்தும் நோக்கிலேயே செய்யப்படுவதாக முன்னாள் அரசின் ஆதரவாளர் கூறுகின்றனர்.
.
ஜூன் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை, 2015 ஆம் ஆண்டில் சீனாவின் நிறுவனமான China Harbor Engineering Co ராஜபக்ச சார்பு தேர்தல் நடவடிக்கைகளுக்கு பெருமளவு பண உதவி செய்துள்ளது என்று கூறுகிறது.
.

ராஜபக்ச மேற்படி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
.