துருக்கியில் Erdogan மீண்டும் வெற்றி

Turkey

துருக்கியில் இன்று ஞாயிரு இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எர்டோகன் (Recep Tayyip Erdogan) மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரின் கட்சியின் தலைமையில் போட்டியிட்ட கூட்டணியும் பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
.
ஜனாதிபதி தேர்தலின் எர்டோகன் சுமார் 53% வாக்குகள் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அத்துடன் மொத்தம் 600 ஆசனங்கள் கொண்ட பாரளுமன்றில் எர்டோகன் தலைமயிலான கூட்டணி சுமார் 343 ஆசனங்களை பெறும் என்றும் கூறப்படுகிறது.
.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எர்டோகன் நடாத்திய அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் துருக்கியின் சட்டத்தை மாற்றி, அங்கிருந்த பாராளுமன்ற ஆட்சியை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக்கு மாற்றி இருந்தார்.

.
தனது ஆட்சியை மேற்கு நாடுகள் இராணுவ சதிமூலம் கவிழ்க்க முனைந்தது என்று கருதுபவர் எர்டோகன். அதனால் எர்டோகன் வெற்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ந்தும் தலையிடியாக அமையலாம். துருக்கி ஒரு NATO நாடு என்றாலும், எர்டோகன் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை ஆரம்பித்துள்ளவர்.
.