பாரதீய ஜனதா கட்சியின் (BJP) உதவியுடன் காஸ்மீர் மாநில கட்சியான People’s Democratic Party (PDP) தலைமையில் இருந்த ஆட்சி, BJP கூட்டு ஆட்சியில் இருந்து விலகியதால், கவிழ்ந்துள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலமான ஜம்மு-காஸ்மீரில் 2015 ஆம் ஆண்டுமுதல் இந்த கூட்டு ஆட்சியில் இருந்துள்ளது.
.
தற்போது PDP கட்சியிடம் 28 ஆசனங்களும், BJP கட்சியிடம் 25 ஆசனங்களும் உள்ளன. அந்த மாநிலத்தில் பெரும்பான்மை ஆட்சி செய்ய குறைந்தது 45 ஆசனங்கள் தேவை.
.
ஆட்சி கவிழ்ந்தமையால் மாநில முதல்வர் Mehbooba Mufti தனது பதவியை விலகி உள்ளார்.
.
அந்த மாநிலத்தின் தெற்கே அதிகமாக இந்துக்கள் குடியுள்ளனர். அதனால் தெற்கே BJP செல்வாக்கில் உள்ளது. இஸ்லாமியர் அதிகம் உள்ள வடபகுதியில் PDP செல்வாக்கில் உள்ளது. PDP காஸ்மீர் கிளர்ச்சியாளர் மீது அனுதாபம் கொண்ட ஒரு காட்சியாகும்.
.
PDP அங்கு வன்முறைகளை கட்டுப்படுத்தவில்லை என்பதே BJPயின் குற்றச்சாட்டாகும்.
.