இந்தோனேசியாவின் Sulawesi என்ற தீவில் 54 வயது பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அந்த பெண்ணை தேடிச்சென்ற கிராமத்தவர் சுமார் 8 மீட்டர் நீளம் (23 அடி) கொண்ட மலைப்பாம்பு (python) ஒன்றின் உடல் வழமைக்கு மாறாக வீங்கி இருந்ததை கண்டுள்ளனர். சந்தேகம் கொண்ட கிராமத்தவர் அந்த மலைப்பாம்பின் உடலை வெட்டியபோது காணாமல் போன பெண்ணின் உடல் காணப்படுள்ளது.
.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னரும் இப்பகுதியில் Akbar Salubiro என்ற 25 வயதுடைய ஆண் ஒருவரை மலைப்பாம்பு ஒன்று விழுங்கி இருந்தது.
.
மலைப்பாம்பிடம் விஷம் இல்லாதுவிடினும், அவை தமது இரையை சுற்றிவளைத்து, சுவாசிக்க முடியாது நெருக்கி, அத்துடன் எலும்புகளையும் முறித்து பின் முழுதாக விழுங்கும். நெரிக்கும்போது இரை சுவாசிப்பது தடைப்பட்டு, இரையின் குருதி பரம்பலும் தடைபடும். இரைகளை பிடிக்க மட்டுமே மலைப்பாம்பு தனது பற்களை பயன்படுத்தும்.
.
Guinness புத்தகத்தில் பதியப்பட்ட அதிகூடிய நீளம் கொண்ட மலைப்பாம்பின் நீளம் 25 அடி ஆகும். மலைப்பாம்பின் அதிகூடிய வேகம் சுமார் 1.6 km/h (1 mile/h) மட்டுமே.
.