2026 World Cup அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவில்

FIFA

2026 ஆம் ஆண்டுக்கான FIFA World Cup கால்பந்தாட்ட போட்டிகள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளிலும் இடம்பெறவுள்ளன. மொத்தம் 200 வாக்குகளில் 134 வாக்குகள் மேற்படி மூன்று நாடுகளின் கூட்டுக்கு கிடைத்துள்ளது. இந்த கூட்டுடன் போட்டியிட்ட மொராக்கோ (Morocco) சந்தர்ப்பத்தை இழந்துள்ளது.
.
2026 ஆம் ஆண்டில் மொத்தம் 80 போட்டிகள் இடம்பெறும். அதில் 60 போட்டிகள் அமெரிக்காவில் இடம்பெறும். கனடாவிலும், மெக்ஸிக்கோவிலும் தலா 10 போட்டிகள் இடம்பெறும்.
.
இந்த போட்டிகள் மொத்தம் 16 மைதானங்களில் இடம்பெறும். ஆனால் எந்த நகரத்து மைதானங்களில் அவை இடம்பெறும் என்பது வரும் காலத்திலேயே அறியபப்படும்.
.
அமெரிக்கா முன்னர் ஒரு தடவை World Cup போட்டியை 1994 ஆம் ஆண்டில் நடாத்தி இருந்தது. மெக்ஸிகோ 1970 ஆம் ஆண்டிலும், 1986 ஆம் ஆண்டிலும் World Cup போட்டிகளை நடாத்தி இருந்தது.
.
2022 ஆம் ஆண்டுக்கான World Cup போட்டிகள் கட்டாரில் இடம்பெறும். இந்த ஆண்டுக்கான போட்டிகள் ரஷ்யாவில் இடம்பெறவுள்ளன.

.