அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் (வயது 71), வடகொரிய தலைவர் கிம்மும் (வயது 34) இன்று சிங்கப்பூரில் உள்ள Sentosa (Sanskrit: santosha, சந்தோச) நேரடியாக சந்தித்து உள்ளனர். இதுவரை ஒருவரை மற்றவர் தூற்றியதை மறந்து, இருவரும் நட்புடன் சந்தித்து கைகுலுக்கினர். கிம்முடனான சந்திப்பை ரம்ப் “terrific relationship” என்றும், “better than expected” என்றும் வர்ணித்துள்ளார்.
.
கிம் சீனாவின் தலைவர்கள் பயன்படுத்தும் Boeing 747 Air China விமானம் ஒன்றிலேயே சிங்கப்பூர் வந்திருந்தார். அவர் முன் அறிவிப்பு இன்றி சிங்கப்பூரின் Marina Bay வழியே நடந்தும் உலாவியுள்ளார். அத்துடன் Marina Bay அருகே உள்ள பூங்கா ஒன்றுக்கும் சென்றுள்ளார் கிம்.
.
சுமார் 2,500 பத்திரிகையாளர் இந்த சந்திப்புக்காக சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
.
ரம்ப்-கிம் சந்திப்புக்கு சுமார் சிங்கப்பூர் நாணயம் $20 மில்லியன் (U$ 15 மில்லியன்) பணம் செலவானது என்றும், அதை தாமே செலுத்துவதாகவும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong கூறியுள்ளார். அதில் பெரும் தொகையான செலவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கானது. அத்துடன் கிம் தரப்பின் தங்குமிட செலவுகளையும் சிங்கப்பூரே செலுத்துகிறது.
.
சர்வதேச பத்திரிக்கையாளருக்கான சகல வசதிகளும் கொண்ட நிலையம் ஒன்றுக்கு மட்டும் சிங்கப்பூர் நாணயம் $5 மில்லியன் செல்வானதாக அந்நாட்டு Ministry of Communication and Information கூறியுள்ளது..
.