2017 ஆம் ஆண்டில் ஜப்பானின் சனத்தொகை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டிலும் ஜப்பானின் சனத்தொகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருந்தது.
.
.
2017 ஆம் ஆண்டில் ஜப்பானில் 946,060 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இரண்டாவது வருடமாக அங்கு 1 மில்லியனுக்கும் குறைவான குழந்தைகள் பிறந்துள்ளன. அதேவேளை அங்கு 1,340,433 பேர் மரணமாகி உள்ளனர். அதனால் ஜப்பானின் சனத்தொகை 394,373 ஆல் குறைந்துள்ளது.
.
.
கடந்த வருடத்து பிறப்பு எண்ணிக்கையிலும் இந்த வருட பிறப்பு தொகை 30,918 ஆல் மேலும் குறைந்திருக்க, கடந்த வருடத்து மரண தொகையிலும் இந்த வருட மரண தொகை 32,000 ஆல் இங்கு மேலும் அதிகரித்து உள்ளது.
.
.
சராசரியாக 1.43 குழந்தைகளையே ஜப்பானின் குழந்தை பெறும் பருவத்து பெண் ஒருவர் கொண்டுள்ளார். Tokyo நகரில் இந்த விகிதம் 1.21 ஆக உள்ளது. Okinawa பகுதியில் இந்த விகிதம் 1.94 ஆக உள்ளது.
.
ஜப்பானின் சாத்தொகையை அதிகரிக்க ஜப்பான் அரசு முடிந்ததை செய்யவுள்ளது. 2025 ஆண்டளவில் அந்நாட்டு பிறப்பு விகிதத்தை 1.8 ஆக அதிகரிக்க முனைகிறது அந்நாட்டு அரசு.
.