இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் விமான சேவையான AirAsia India மீது இந்தியாவின் குற்ற புலனாய்வு பிரிவான CBI விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதனால் AirAsia Indiaவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
.
.
அண்மைக்காலம் வரை இந்திய சட்டப்படி இந்தியாவுள் குறைந்தது 20 விமானங்களை கொண்டுள்ள விமான சேவை, குறைந்தது 5 வருடங்கள் உள்ளூர் சேவை செய்த பின்னரே சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்க முடியும். ஆனால் அண்மையில் அந்த சட்டம் மாற்றப்பட்டு, இந்திய நிறுவனத்தின் 51% உரிமையை கொண்ட நிறுவனம் சர்வதேச விமான சேவையில் ஈடுபடலாம் என்று அமைக்கப்பட்டது.
.
.
புதிய சட்டத்துக்கு அமைய மலேசியாவின் AirAsia விமான சேவை, 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் AirAsia India வை உருவாக்கி, இலாபகரமான சர்வதேச சேவையை உடனடியாக ஆரம்பித்து. அப்போது AirAsia Indiaவிடம் 18 விமானங்கள் மட்டுமே இருந்தன. அத்துடன் அதனிடன் 5 வருட உள்ளூர் சேவை செய்த தராதரமும் இருந்திருக்கவில்லை. இந்தியாவை தளமாக கொண்ட AirAsia India புதிய சட்டத்துக்கு அமைய 51% இந்திய உரிமையை கொண்டிருந்தது என்றே கூறப்பட்டது.
.
.
ஆனால் CBI விசாரணைகள் AirAsia Indiaவிடம் 51% இந்திய உரிமைகள் இல்லை என்றும், மலேசியரான Tony Fernandes என்பவரிடம் முழு கட்டுப்பாடும் உள்ளது என்றும் கூறுகின்றன. அண்மையில் இந்திய குற்ற புலனாய்வு பிரிவான CBI டெல்லி, மும்பாய், பெங்களூர் ஆகிய இடங்களில் திடீர் தேடுதல்களையும் செய்துள்ளது.
.
AirAsia இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி தமது செயல்பாடுகளை பாதுகார்த்ததா என்று CBI விசாரணைகள் செய்கிறது. குற்றங்கள் நிரூபிக்கப்படின் AirAsia India தனது சேவையை முடக்க நேரிடும்.
.
.