1978 ஆம் ஆண்டுமுதல் 1980 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பிரித்தானியாவின் MI5 (Military Intelligence 5) மற்றும் SAS (Special Air Service) அமைப்புகள் இலங்கை தொடர்பாக கொண்டிருந்த 195 ஆவணங்களை பிரித்தானியா இரகசியமாக அழித்துள்ளது என்று பிரித்தானியாவின் The Guardian பத்திரிகை கூறியுள்ளது. இந்த ஆவணங்கள் எப்போது, எங்கே அழிக்கப்பட்டன என்ற விபரங்கள் தற்போதும் மறைக்கப்பட்டுள்ளன. அக்கால பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான செயல்பாடுகளை மறைக்கவே இவ்வாறு ஆவண அழிப்பு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
.
.
திட்டமிட்ட இந்த அழிப்பில் இருந்து 3 ஆவணங்கள் மட்டுமே தப்பி உள்ளன. தப்பியுள்ள ஆவணம் ஒன்றின்படி அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். பிரித்தானியாவிடம் வடக்கின் ஆயுத போராட்டத்தை அடக்க உதவி கேட்டிருந்துள்ளார். ஆனால் அதற்கு பிரித்தானியாவின் பதில் என்னவென்பது தற்போது தெரியாது. அந்த விபரங்கள் அழிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்திருக்கலாம்.
.
.
தப்பிய ஆவணங்களின்படி பிரித்தானியாவின் MI5 என்ற பாதுகாப்பு சேவையின் director John Percival Morton என்பவர் 1979 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் இலங்கை வந்துள்ளார். இந்த பயணம் தொடர்பாக 1979 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “Sri Lanka: Defense Visits from UK” என்ற ஆவணமும் அழிக்கப்பட்டுள்ளதாம்.
.
.
Morton என்பவர் ஒரு துவேசம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இவர் பிரித்தானியா இந்தியாவை ஆண்ட காலத்தில் இந்தியாவில் போலீஸ் தலைமை அதிகாரியாக இருந்தவர். அப்போது அவர் இந்தியர்களை “முதிர்ச்சி அடையாத, பின்தங்கிய, அவா கொண்ட மக்கள் என்றும், அவர்களை பிரித்தானியா ஆள்வது நியதி” (a sort of immature, backward and needy people whom it was the natural British function to govern and 6administer) என்றும் கூறி இருந்தார்.
.
.
Morton விடுத்த பணிப்பின் காரணமாகவே 1980 ஆம் ஆண்டில் இலங்கை வந்த SAS, தெரிவு செய்யப்பட்ட 60 இலங்கை படையினருக்கு பயிற்சி அளித்துள்ளது.
.