அமெரிக்கா ஜனாதிபதி ரம்பும் வடகொரியாவின் தலைவர் கிம்மும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளை நிறுத்த பேச்சுவார்த்தைகள் செய்யவிருந்தனர். இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் ரம்பும் கிம்மை புகழ்ந்து அறிக்கைகள் வெளியிட்டு இருந்தார். தனக்கு சமாதத்துக்கான நோபேல் பரிசு கிடைப்பதிலும் தவறில்லை என்று கூறியிருந்தார்.
.
.
ஆனால் தற்போது அந்த சந்திப்பு இடம்பெறுமா, இடம்பெற்றாலும் அந்த சந்திப்பு பலன் எதையும் அளிக்குமா என்ற சந்தேகங்கள் ரம்புக்கு தற்போது தோன்றியுள்ளன. இவ்வகை கருத்துக்களை ரம்ப் இன்று செவ்வாய் வெள்ளைமாளிகை வந்துள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் முன்னிலையில் கூறியுள்ளார்.
.
.
வடகொரிய தரப்பால் ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் John Bolton கூறிய கருத்து ஒன்றும் தமது விசனத்துக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. அணுவாயுதம் தொடர்பாக லிபியாவில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையே (Libya model) வடகொரியாவிலும் பின்பற்றப்படும் என்று Bolton அண்மையில் கூறியிருந்தார். மேற்கின் வேண்டுகோளுக்கு லிபியாவின் கடாபி அணுவாயுத நிபந்தை எதுவுமின்றி கைவிட்டிருந்தார். ஆனால் அவர் பின்னாளில் மேற்கின் விமான படைகள் கடாபியை விரட்ட, மேற்கின் ஆதரவு குழுக்கள் அவரை படுகொலை செய்தன. அணுவாயுதங்களை கைவிட்ட சதாமுக்கும் பின்னாளில் அதுவே நடந்தது.
.
.
தேவைப்பட்டால் ரம்ப்-கிம் சந்திப்பு பின்போடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
.