மலேசியாவில் புதிய பிரதமர், வயது 92

Malaysia

மலேசியாவில் புதன்கிழமை இடம்பெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியை தலைமை தாங்கிய Mahathir Mohamad மீண்டும், தனது 92 ஆவது வயதில், பிரதமர் ஆகவுள்ளார். மொத்தம் 222 ஆசனங்களில், எதிர்க்கட்சி 115 ஆசனங்களை வென்றுள்ளது.
.
Mahathir தனது 56 ஆவது வயதில் முன்னர் மலேசியாவின் பிரதமராக பதவி வகித்தவர். 1981 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இவர் பிரதமராக ஆட்சி செய்திருந்தார். அப்போது அவர் ஆளும் கட்சியின் உறுப்பினராக இருந்திருந்தாலும், 2016 ஆம் ஆண்டில் அக்கட்சியை விட்டு வெளியேறி இருந்தார்.
.
இந்த வெற்றி மூலம் சுமார் 60 வருடங்களாக ஆட்சி செய்துவந்த Barisan Nasional கட்சியை பதவியில் இருந்து விலக்கியுள்ளது எதிரணி. Mahathir தலைமையிலான எதிரணியின் முதலாவது தேர்தல் விஞ்ஞாபனம் மலேசியாவில் அரசியலில் ஊழலை ஒழிப்பதே.
.

தற்போதை ஆளும்கட்சி பிரதமர் Najib Razak மீது பல ஊழல் குற்றசாட்டுகள் உள்ளன. அவற்றில் 1Malaysia Development Berhad (1MDB) மிகப்பெரியது. இந்த ஊழலில் சுமார் $700 மில்லியன் பொதுப்பணம் களவாடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணைகள் தொடர்கின்றன.
.