நியூயார்க் Attorney General விலகல், இலங்கை பெண் குற்றசாட்டு

Schneiderman

நியூயோர்கின் (New York) attorney general Eric Schneiderman நேற்று திங்கள் இரவு தனது பதவியை துறந்துள்ளார். இவர் மீது நான்கு பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்ததே இவரின் பதவி விலகலுக்கு காரணம். இந்த நான்கு பெண்களுள் இலங்கையில் பிறந்த ரான்யா செல்வரெத்தினமும் (Tanya Selvaratnam) ஒருவர். அதேவேளை Schneiderman தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தும் உள்ளார்.
.
Michelle Manning என்ற பெண்ணும் Tanya செல்வரத்தினமும் தம்மை Schneiderman தாக்கியும், கழுத்தை நெரித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளனர். இன்னோர் பெண், ஒரு வழக்கறிஞர், தனது கன்னத்தில் தாக்கியதாக கூறியுள்ளார். நாலாவது பெண்ணும் தன் மீதான வன்முறைகளை விபரித்து உள்ளனர். நான்கு பெண்களும் தாம் Schneiderman உடன் தொர்புகளை கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
.

இலங்கை தமிழ் பெண்ணான செல்வரத்தினத்தை  63 வயதான Schneiderman ‘brown slave’ என்று அழைப்பாராம்.
.