மலேசியாவில் 131 இலங்கை அகதிகள் கைது

Malaysia

மாற்றி அமைக்கப்பட்ட tanker வகை கப்பல் மூலம் அஸ்ரேலியா அல்லது நியூசீலாந்து செல்ல முனைந்தார்கள் என்று கூறி 131 இலங்கையரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளார். இவர்களுள் 98 ஆண்கள், 24 பெண்கள், 4 சிறுவன்கள், 5 சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்.
.
சிங்கப்பூரை அண்டியுள்ள மலேசியாவின் Johor மாநிலத்துக்கு அருகில் இந்த கப்பல் இடைநிறுத்தப்பட்டு தேடுதல் செய்யப்பட்டிருந்தது. அப்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
.
இவர்களை கடத்த பயன்படுத்தப்பட்ட மீன்பிடி வள்ளத்துடன், 3 இந்தோனேசியர், 4 மலேசியர் ஆகியோரும் கூடவே கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மேலும் 5 மலேசியர் இந்த விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
இந்த பயணத்துக்கான வேலைப்பாடுகள் 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நடைபெற்று வந்திருக்கலாம் என்று கூறுகிறார் மலேசிய போலீஸ் அதிகாரியான Mohamad Fuzi.
.
இவர்களுள் 127 இலங்கையர் சட்டவிரோதமாக மாலேசியாவுள் புகுந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுளார்கள்.
.