இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் இந்திய பிரதமர் மோதி சீனாவின் ஜனாதிபதியை சீனாவின் மத்திய பகுதியில் உள்ள வூகான் (Wuhan) நகரத்தில் சந்திக்கவுள்ளார்.
.
.
இந்த சந்திப்பு ஒரு ‘informal’ சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இவர்கள் இருவரும் மிக முக்கிய விடயங்களை கலந்துரையாடுவார்கள் கூறப்படுகிறது. அனால் பேசப்படும் விடயங்கள் எதுவும் பகிரங்கம் செய்யப்படவில்லை.
.
.
அண்மையில் சீனாவின் Xiamen நகரில் இடம்பெற்ற BRICS மாநாட்டின்போது சீனாவின் ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் பிரத்தியேகமாக உரையாடி இருந்தனர். அப்போது சீனா இந்தியாவின் கவலைபாடுகளை ஓரளவு புரிந்து கொள்வதாக கூறியிருந்தது. வரும் Wuhan சந்திப்பு வேலைகள் Xiamen சந்திப்பிலேயே ஆரம்பமாகி இருந்தன.
.
.
இந்த சந்திப்பை மனதில் கொண்டே அண்மையில் தலாய் லாமா (Dalai Lama) தனது 60ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியபோது அனைத்து இந்திய அரசில் தலைமையையும் அந்த பிறந்த தின விழாவில் பங்கு கொள்ளவேண்டாம் என்று கேட்கப்பட்டு இருந்தது.
.
.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேர்தல் இடபெறவுள்ள நேரத்தில் இந்திய-சீன எல்லைகளில் எதிர்பாராத இடர்கள் ஏற்படுவதையும் மோதி தவிர்க்க இந்த சந்திப்பை பயன்படுத்துவார்.
.