நாட்டுக்கு அனுப்பும் பணத்தில் இந்தியா முதலிடம்

Dollar

அந்நிய நாடுகளில் வாழும் அல்லது தொழில் புரியும் மக்கள் தம் நாடுகளுக்கு பணம் அனுப்புவது வளமை. இவ்வகை பணத்தை (remittances) பெறும் நாடுகளில் முதலாவதாக உள்ளது இந்தியா. 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு $69 பில்லியன் பணம் இவ்வகையில் கிடைத்துள்ளது என்கிறது உலக வங்கி (Worl Bank). இத்தொகை 2016 ஆம் ஆண்டுக்கான தொகையிலும் 9.9% அதிகம். ஆனால் 2014 ஆம் ஆண்டிலேயே இந்தியா அதிக தொகையான $70.4 பில்லியன் பணத்தை இவ்வகையில் பெற்றிருந்தது.
.
இரண்டாவது இடத்தில் உள்ள சீனா $64 பில்லியன் பணத்தை இவ்வகையில் பெற்றுள்ளது. பிலிப்பீன் $33 பில்லியன் பணத்தையும், மெக்ஸிகோ $31 பில்லியன் பணத்தையும், நைஜீரியா $22 பில்லியன் பணத்தையும், எகிப்து $20 பில்லியன் பணத்தையும் பெற்று முறையே 3ஆம், 4ஆம், 5ஆம், மற்றும் 6ஆம் இடங்களில் உள்ளன.
.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகளுக்கான இவ்வகையிலான பணம் அனுப்பல் முன்னைய ஆண்டுகளின் மட்டத்திலேயே உள்ளன. பாகிஸ்தான் $20 பில்லியன் பணத்தையும், பங்களாதேசம் $13 பில்லியன் பணத்தையும் பெற்றுள்ளது.
.

இலங்கைக்கான பணம் அனுப்பல் 2017 ஆம் ஆண்டில் சுமார் 0.9% ஆல் குறைந்து உள்ளது.
.