சீனாவின் G30 என்ற பெரும்தெருவில் உள்ள 30 மீட்டர் உயரமான பாலம் ஒன்றில் வாணவேடிக்கை பொருட்களை ஏற்றி சென்ற பாரிய வாகனம் ஒன்று வெடித்ததால் 80 மீட்டர் நீள பாலத்துண்டு உடைந்து வீழ்ந்துள்ளது. அப்போது அதில் சென்றுகொண்டிருந்த சுமார் 25 வாகனங்களும் 30 மீட்டர் வரை வீழ்ந்ததால் 9 பேர் பலியாகியும் பலர் காயமடைந்தும் உள்ளனர். உள்ளூர் நேரப்படி இவ்விபத்து காலை 8:50 அளவில் இடம்பெற்றுள்ளது.
4400 km நீளமான G30 பெரும்தெரு சீனாவில் கிழக்கு-மேற்காக செல்லும் நீளம் கூடிய பெரும்தெரு ஆகும். மாசி மாதம் 10ஆம் திகதியில் இடம்பெறவுள்ள விடுமுறையில் பெருமளவு வாணவேடிக்கைகள் இடப்பெறுவது உண்டு.