சீனாவில் உலகின் மிகநீள 55 km பாலம்.

HK_Macau_Bridge

சீனாவில் 55 km நீளம் கொண்ட பாலம் ஒன்று கட்டுமான வேலைகள் பூர்த்தியான நிலையில் உள்ளது. Hong Kong, Zhuhai, Macau ஆகிய இடங்களை இணைக்கும் இந்த பாலம் 22.9 km நீள பிரதான பாலத்தையும், 6.7 km நீள கடலுக்கு கீழான சுரங்கத்தையும் கொண்டது.
.
இந்த பால திட்டமிடல் வேலைகள் சுமார் 6 வருடங்களையும், கட்டுமானம் சுமார் 8 வருடங்களையும் எடுத்து இருந்தன.
.
இந்த பாலம் தற்போது 3 மணித்தியாலங்கள் செலவிட்டு பயணிக்கும் தூரத்தை, 30 நிமிடங்களில் பயணிக்க வழி செய்யும். இந்த பாலத்தை பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்தியே பயணிக்க வேண்டும்.
.
இந்த பாலம் சுரங்கமாக மாறும் இடத்தில், நடுக்கடலில், ஒரு செயற்கை தீவும் கட்டப்பட்டது. இருவழி பாதைகளை கொண்ட இந்த சுரங்கத்தின் ஒவ்வொரு வழியும் 3 பாதை பிரிவுகளை (lanes) கொண்டுள்ளன.
.
இந்த பாலத்துக்கான மொத்த செலவு சுமார் $15.9 பில்லியன் என்று கூறப்படுகிறது.
.

இந்த பாலம் வரும் ஜூலை மாதத்தில் சேவைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
.