இந்து சமுத்திரத்தில் உள்ள சீசெல்லில் (Seychelles) இந்தியா தனது படை தளம் ஒன்றை அமைக்கவுள்ளது. சீனா தனது ஆளுமையை இந்து சமுத்திரத்தில் பரப்பிவரும் செய்கைக்கு போட்டியான செய்கையே இதுவென்று கருதப்படுகிறது.
.
.
கடந்த மாதம் இந்தியாவும், சீசெல்லும் 20-வருட உடன்படிக்கை ஒன்றில் ஒப்பமிட்டன. அந்த ஒப்பந்தப்படி, இந்தியா ஒரு விமான ஓடுபாதையையும், கப்பல் இறங்கு துறையையும் அமைக்கும். இவை இரண்டும் சிசெல்லின் Assumption தீவில் அமையும்.
.
.
இந்த திட்டம் இந்திய பிரதமர் மோதி 2015 ஆம் ஆண்டு அங்கு சென்றபோதே முன்வைக்கப்பட்டு இருந்தாலும், பலமான உள்ளூர் எதிர்ப்புகளின் மத்தியில் தற்போதே ஒப்பமிடப்படுள்ளது.
.
.
ஆபிரிக்காவுக்கு கிழக்கே சுமார் 1,500 km தொலைவில் உள்ள Seychelles 115 தீவுகளை கொண்டது. 1976 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற இந்நாட்டின் சனத்தொகை சுமார் 95,000 மட்டுமே.
.