இந்தியாவின் மும்பாய் (Mumbai) நகரில் உள்ள Punjab National Bank என்ற வங்கி கிளை ஒன்றின் மூலமாக சுமார் US$1.77 பில்லியன் களவாடப்பட்டு (fraudulent transactions) உள்ளது. Punjab National Bank அரச கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டாவது பெரிய இந்திய வங்கி. இந்த செய்தியால் அவ்வங்கியின் பங்கு (stock) சுமார் 10%ஆல் வீழ்ந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக CBI தெரிவித்தும் உள்ளது.
.
.
Punjab National Bank வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தாம் “சில சந்தேகத்துக்கு இடமானதும், அங்கீகாரம் இல்லாதுமான பண மாற்றங்ககளை அறிந்துள்ளதாக” கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பணமாற்று வேண்டுகோள்களுக்கு அமைய மற்றைய வங்கிகள் பெரும் தொகை பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
.
.
இந்த திருட்டின் பிரதான சந்தேகநபர் Nirav Modi என்ற பில்லியன் சொத்து கொண்ட இந்திய நகை வியாபாரி ஆவார். இவர் பொய்யான ஆவணங்களை தயாரித்து வங்கி கடன்களை பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இவரை இளைய சகோதரன் அம்பாணி (Ambani) குடும்பத்தில் திருமணம் செய்தவர்.
.
.
Gokulnath Shetty, Manoj Kharat, Hemant Bhat ஆகிய மூவரே தற்போது கைது செய்யப்படுள்ளவர். Nirav Modiயின் மறைவிடம் இதுவரை அறியப்படவில்லை. இவர் New York நகரில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவரின் இந்திய கடவுசீட்டு தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் $1.73 பில்லியன் சொத்து கொண்ட இவர் இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்களுள் ஒருவர் என்கிறது Forbes.
.
விரைந்து செயல்பட்ட இந்திய அரசு இவரின் கடைகளில் இருந்து சுமார் $870 மில்லியன் பெறுமதியான வைரங்கள், நககைள், 29 சொத்துக்கள், 105 வாங்கி கணக்குகள் என்பவற்றை முடக்கி உள்ளது.
.